Wednesday, 5 November 2014

இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு:ரூ.61.34

மும்பை : சர்வதேச வணிக மாற்று சந்தையில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகளிடையே அமெரிக்க டாலரின் விற்பனை அதிகரித்துள்ளதால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது(நவம்பர் 5 காலை 9 மணி நிலவரம்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 காசுகள் உயர்ந்து 61.34 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாயின் மதிப்பு 61.40 ஆக இருந்தது. இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள உயர்வும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

No comments:

Post a Comment