Saturday, 1 November 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும் தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதே மையங்களில் இந்த வாரமும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகள் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி
முதல் நடைபெற்று வருகின்றன. இந்த திருத்தத்தின் போது, பட்டியலில் பெயரைச் சேர்க்கவும், திருத்தங்கள் இருந்தால் அவற்றை சரிசெய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ஒரு நாள் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் லட்சக்கணக்கானோர் தங்களது விண்ணப்பங்களை அளித்தனர். மேலும், பலர் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமும் விண்ணப்பம் செய்திருந்தனர். இதுவரை பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்டவற்றுக்காக 8 லட்சம் பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.
நவ.2-ல் சிறப்பு முகாம்: கடந்த வாரத்தைப் போன்று இந்த ஞாயிற்றுக்கிழமையும் (நவ. 2) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. கடந்த வாரத்தில் நடைபெற்ற அதே வாக்குச் சாவடி மையங்களில் இந்த வாரமும் சிறப்பு முகாம் நடைபெறும் எனத் தெரிவித்த தேர்தல் துறை அதிகாரிகள், தூத்துக்குடியில் மட்டும் சனிக்கிழமை (நவ.1) நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியலில் பிழைகள் இல்லாமல் செய்யவும், வாக்காளர் அடையாள அட்டைகளில் தவறுகள் நடக்காமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புதிதாக பொறுப்பேற்ற தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சென்னையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும், தேர்தல் துறையின் (ட்ற்ற்ல்:ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்) இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது தவறுகள் ஏதும் இல்லாமல் துள்ளியமாக தகவல்களைத் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
விண்ணப்பப் படிவங்கள்: தமிழகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்குச் செல்வோர், பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அங்கேயே பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். மேலும், இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

இதுவே கடைசி முகாம்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நவம்பர் 10-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேசமயம், தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமே கடைசி முகாமாகும். இதன்பிறகு, தாலுகா, மாநகராட்சி அலுவலகங்களுக்குச் சென்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment