Friday, 28 November 2014

பேஸ்புக் பழக்கத்தால் வந்த வினை: போலி தங்க பிஸ்கெட் கொடுத்து ரூ.40 ஆயிரம் மோசடி




கோப்புப் படம்: ஏ.பி.
ஹைதராபாத்தை சேர்ந்த லட்சுமி வர்மா சினிமா உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் மூலமாக சிந்து எனும் பெண் பழக்கமானார்.
திருப்பதியை சேர்ந்த அஜய் ரெட்டி எனும் சினிமா தயாரிப்பா ளரை அறிமுகப்படுத்துவதாக கூறிய சிந்து, அஜய் ரெட்டியின் செல்போன் எண்ணை லட்சுமி வர்மாவிடம் அளித்தார்.
பின்னர் லட்சுமி வர்மாவுக்கும் அஜய்ரெட்டிக்கும் செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன் தினம் குண்டூரில் உள்ள அரண்டல்பேட்டா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் சந்தித்துப் பேசினர். புதிதாக சினிமா படம் தயாரிப்பது குறித்து அவர்கள் பேசினர்.
தங்க பிஸ்கெட்டுகள் விற்பனை செய்யும் வியாபாரி என்று தன்னை அறிமுகப்படுத்திய அஜய்ரெட்டி, ஒரு தங்க பிஸ்கெட்டை கொடுத்துள்ளார்.
இதனை ரூ.40 ஆயிரம் கொடுத்து வாங்கி கொண்ட லட்சுமி வர்மா மீதி பணத்தை வங்கியில் செலுத்துவதாகக் கூறி உள்ளார். இதற்கு அஜய்ரெட்டி ஒப்புக்கொண்டார்.
சில மணி நேரம் கழித்து குண்டூரில் உள்ள நகைக்கடையில் தங்க பிஸ்கெட்டின் மதிப்பை அறிந்து கொள்ள லட்சுமிவர்மா சென்றார். அந்த தங்க பிஸ்கெட்டை பரிசோதித்த நகைக்கடையினர், அது போலி தங்க பிஸ்கெட் என தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த லட்சுமி வர்மா அரண்டல் பேட்டா போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாச ராவ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்

No comments:

Post a Comment