திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையில் டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 18–ந்தேதி கடைசி நாள் என்று கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
1
8–ந்தேதி கடைசிநாள்
வேளாண்மை துறையில் புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனத்தை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் ஊதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது. அதன்படி இப்பணிக்கு 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நடைமுறையில் உள்ள இலகு வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகனம் ஓட்டுதல் மற்றும் பராமரித்தல் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நல்ல பார்வை திறன் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனத்தின் பழுதினை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அரசு நிர்ணயித்த வயது வரம்புக்குள் இருக்க வேண்டும்.தகுதி உள்ள டிரைவர்கள் தங்களது விண்ணப்பங்களை, சான்றிதழ்களின் நகல்களுடன்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிற 18–ந்தேதி காலை 10 மணிக்கு நேரில் வர வேண்டும். ஓட்டும் திறன் குறித்த தேர்வில் தேர்வு செய்யப்படும் டிரைவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் நியமனம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment