இந்தியப் பெருங்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
இந்திய பெருங்கடலில் நடுநிலைக்கோட்டு பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு நோக்கி நகரும். இதனால் தென் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புண்டு. இது மேலும், மேற்கு திசையில் நகர்ந்தால், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 10 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் மடுக்கூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 7 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் ஆனைக்காரன்சத்திரம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆகிய இடங்களில் 6 செ.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கொடவாசல், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கடலூர் மாவட்டம் சிதம்பரம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. காரைக்கால், தூத்துக்குடி, நாமக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment