மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் கிசான் விகாஸ் பத்திரம் மீண்டும் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கிசான் விகாஸ் பத்திரத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கிஸான் விகாஸ் பத்திர விற்பனை நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.
தொடக்கவிழா நிகழ்ச்சியில் சென்னை மாநகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கலந்துகொண்டு முதல் பத்திரத்தை வெளியிட்டார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் மீண்டும் கிசான் விகாஸ் பத்திர விற்பனை தொடங் கப்பட்டுள்ளது. இந்தியாவில் சேமிப்பு நிதியின் அளவை உயர்த்துவதற்காகவும், பொது மக்களிடையே சேமிக்கும் பழக் கத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக் கும் தொகை 100 மாதங்களுக்கு பிறகு ( 8 ஆண்டு, 4 மாதங்கள்) இரட்டிப்பாகும். தற்போது அஞ்சல் துறையில் கோர் பேங்கிங் சிஸ்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால், பத்திரம் முதிர்ச்சி அடையும்போது, இந்தியாவின் எந்த பகுதியில் உள்ள அஞ்சலகத்திலும் அதைப் பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
30 மாதங்களுக்கு பிறகு பணத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இத்திட்டத்தில் உள்ளது. இப்பத்திரத்தை கொண்டு வங்கிகளில் கடனும் பெற்றுக் கொள்ளலாம். இது பாமர மக்களுக்கான திட்டம் என்பதால் இத்திட்டத்தின் கீழ் பணம் சேமித்தால் வருமான வரி விலக்கு கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment