Monday 10 November 2014

புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு


 மத்திய அமைச்சரவையில் நேற்று புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கான இலாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மனோகர் பாரிக்கருக்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுரேஷ் பிரபுவிறகு ரயில்வேத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில அமைச்சர்களின் இலாக்கள் மாற்றப்பட்டுள்ளன. சதானந்த கவுடா, ஹர்சவர்தன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் இலாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். 4 பேர் மத்திய அமைச்சர்களாகவும், 17 பேர் இணையமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பொறுப்புக்கள் நள்ளிரவு அறிவிக்கப்பட்டன. மனோகர் பாரிக்கரிடம், அருண் ஜெட்லி கூடுதலாக வசித்து வந்த பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிவசேனாவிலிருந்து வந்த சுரேஷ் பிரபுவிற்கு ரயில்வேத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஜே.பி.நட்டாவிற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிரேந்தர் சிங்கிற்கு ஊரக வளர்ச்சி,பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இலாகாக்கள் மாற்றம்: ரயில்வேத்துறை அமைச்சராக இருந்த சதானந்தா கவுடா, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த ஹர்சவர்தன் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவியியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கூடுதலாக தகவல் தொழில்நுட்பம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், சாலை நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.நிர்மலா சீதாரமான் நிதி மற்றும் கம்பெனித்துறை பொறுப்பிலிருந்துவிடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மட்டும் நீடிப்பார்.

மத்திய அமைச்சரவை இலாகாக்கள் விபரம்

பிரதமர்நரேந்திர மோடி: பணியாளர், பொதுகுறைகள் மற்றும் ஓய்வூதியம்,விண்வெளி மற்றும் அணுசக்தி துறை, அனைத்து முக்கிய கொள்கைகள், பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கபடாத துறைகள்.

கேபினட் அமைச்சர்கள்
ராஜ்நாத் சிங்- உள்துறை.
சுஷ்மா சுவராஜ்-வெளியுறவுத் துறை,வெளிநாட்டு இந்தியர்கள் விவகாரத் துறை.
அருண் ஜெட்லி- நிதித்துறை, நிறுவன விவகாரத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை. வெங்கய்ய நாயுடு நகர்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு, பார்லிமென்ட் விவாகாரத் துறை.
நிதின் கட்காரி-சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை,கப்பல் போக்குவரத்து.
மனோகர் பாரிக்கர்-பாதுகாப்புத்துறை.
சுரேஷ் பிரபு- ரயில்வே.
ஜே.பி.நட்டா-சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை.
பிரேந்தர் சிங்- ஊரக வளர்ச்சி,பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை
சதானந்த கவுடா-சட்டம் மற்றும் நீதித்துறை.
உமா பாரதி- நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கையை சுத்தப்படுத்துதல்.
நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மையினர் விவகாரத் துறை.
ராம்விலாஸ் பஸ்வான்-நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகம்.
கல்ராஜ் மிஸ்ரா-சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்.
மேனகா-மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை.
அனந்தகுமார்-ரசாயனம் மற்றும் உரத்துறை.
ரவிசங்கர் பிரசாத்-தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை.
அசோக் கஜபதி ராஜு-விமான போக்குவரத்துத் துறை.
ஆனந்த் கீதே-கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை.
ஹர்சிம்ரத் கவுர் பாதல்-உணவு பதப்படுத்துதல் துறை.
நரேந்திர சிங் தோமர்-சுரங்கம், இரும்பு,தொழிலாளர்.
ஜூயல் ஓரம்-பழங்குடியினர் விவகாரத் துறை.
ராதா மோகன் சிங்-விவசாயத் துறை.
தாவர் சந்த் கெலாட்- சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை.
ஸ்மிருதி இரானி-மனிதவள மேம்பாட்டுத் துறை.
ஹர்ஷவர்தன்-அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்,புவி அறிவியல்.

இணைஅமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)
வி.கே.சிங்-வடகிழக்கு பகுதி மேம்பாடு, வெளியுறவுத் துறை, வெளிநாட்டு இந்தியர்கள் விவகாரத் துறை.
இந்தர்ஜித் சிங் ராவ்- திட்டம்,,பாதுகாப்புத் துறை.
சந்தோஷ்குமார் கேங்வார் ஜவுளி,
ஸ்ரீபத் யெசோ நாயக்-குடும்ப மற்றும் சுகாதாரம்
தர்மேந்திர பிரதான்-பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு.
சர்பானந்தா சோனோவல்-இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை.
பிரகாஷ் ஜாவடேகர்-சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம்.
பியுஸ் கோயல்-மின்சாரம், நிலக்கரி,புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி.
ஜிதேந்திரா சிங்-பிரதமர் அலுவலகம்,பணியாளர், பொதுகுறைகள் மற்றும் ஓய்வூதியம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை.
நிர்மலா சீதாராமன்-வர்த்தகம் மற்றும் தொழில்துறை.
பண்டாரு தத்தாத்ரேயா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு.
ராஜிவ் பிரதாப் ரூடி திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை, பார்லிமென்ட் விவகாரத்துறை
முக்தர் அப்பாஸ் நக்வி-சிறுபான்மையினர்நலம்
டாக்டர் மகேஷ் சர்மா கலாசாரம், சுற்றுலாத்துறை,விமானபோக்குவரத்து துறை

இணை அமைச்சர்கள்
ஜி.எம்.சித்தேஸ்வரா-கனரக தொழில்துறை
மனோஜ் சின்ஹா-ரயில்வே துறை.
நிகல் சந்த்-பஞ்சாயத் ராஜ்.
உபேந்திரா குஸ்வாகா-மனிதவள மேம்பாடு
பொன் ராதாகிருஷ்ணன்-சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்த்துறை.
கிரன் ரிஜிஜூ-உள்துறை.
கிருஷ்ணன் பால்-சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
சஞ்ஜீவ் குமார் பால்யன்-விவசாயம்.
மன்சுக்பாய் தன்ஜிபாய் வாசவா-பழங்குடியின விவகாரம்.
ராவ்சகேப் தாதாராவ் தான்வே-நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம்.
விஷ்ணு தியோ சாய்-சுரங்கம்,இரும்பு,
சுதர்ஸன் பாகத்-ஊரக வளர்ச்சி
ராம் கிரிபால் யாதவ் குடிநீர் மற்றும் துப்புரவு.
கிரிராஜ் சிங்- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்.
ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர்-ரசாயனம் மற்றும் உரத்துறை.
ஒய்.எஸ்.சவுத்ரி-அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்,புவிஅறிவியல் துறை.
ஜெயந்த் சின்ஹா-நிதித்துறை
பபுல் சுப்ரியோ-நகர்புற மேம்பாடு,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு.
ராஜ்யவர்தன் சிங் ரதோர்-தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை.
விஜய் சம்ப்லா-சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை.
எச்.பி.சவுத்ரி-உள்துறை.
மோகன் குண்டாரியா-விவசாயத்துறை.
ராம்சங்கர் கதேரியா-மனிதவளத்துறை.
சாத்வி நிரஞ்சன் ஜோதி-உணவு பதப்படுத்துதல்.
சன்வர் லால் ஜட்-நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கையை சுத்தப்படுத்துதல்.

No comments:

Post a Comment