திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், எண்கண் ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக மாற்றப்படும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.
எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் ஒரு கிராம ஊராட்சியை தத்தெடுத்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதன்படி, எண்கண் ஊராட்சியை தேர்வு செய்த திருச்சி சிவா எம்.பி., இதற்கான கடிதத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஆட்சியர் ஆய்வுக்கு சென்றுள்ளதால், மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறனிடம் தகவலை தெரிவித்துள்ளேன். ஊராட்சியின் தரத்தை உயர்த்த இது ஒரு நல்ல வாய்ப்பு. எனவே, மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். மேம்பாட்டுப் பணிக்கான நிதி வரையறை ஏதும் இல்லை என்றார்.
பின்னர், அவர் எண்கண் ஊராட்சியை பார்வையிட சென்றார். அவருடன் திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment