Monday, 24 November 2014

வானிலை முன்னறிவிப்பு: நவ.27 முதல் தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு




இடம்: தூத்துக்குடி |
தமிழகத்தில் இம்மாதம் 27-ம் தேதி முதல் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனீ உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மேலும் மூன்று தினங்களுக்கு மழையோ இடியுடன் கூடிய மழையோ நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்னும் வலுபெறவில்லை. இது அந்தமான் கடலிலிருந்து தென் கிழக்கு வங்கக் கடல் வரை படர்ந்துள்ளது.
இது மேலும் நகர்ந்து மேற்கு வங்கக் கடலை அடைந்த பிறகு, வரும் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment