பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 அதிகரித்துள்ளது. இந்த விலை மாற்றம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வருகிறது.
இதன்படி, பெட்ரோல் விலை இப்போது தொடர்ந்து 7-ஆவது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை தொடர்ந்து 2-ஆவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி பெட்ரோல் விலை 32 பைசா குறைக்கப்பட்டது. டீசல் விலை 28 பைசா உயர்த்தப்பட்டது.
கடந்த பல மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவாகவே உள்ளது. அதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து கூடுதல் வருவாய் ஈட்டி வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் முதல் இப்போது வரை 5 முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.17,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment