Tuesday, 8 March 2016

ஓ.என்.ஜி.சி. குழாயில் கசிவு ஏற்பட்டதால் விளைநிலங்கள் பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


IST









திருவாரூர் அருகே வயலுக்கு அடியில் பதிக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி. குழாயில் கசிவு ஏற்பட்டதால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓ.என்.ஜி.சி. குழாய்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(ஓ.என்.ஜி.சி.) திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வயலுக்கு அடியில் ஓ.என்.ஜி.சி. சார்பில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் அருகே உள்ள தென்கரை வேலங்குடி என்ற பகுதியிலும் வயலுக்கு அடியில் ஓ.என்.ஜி.சி.யின் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேலுசுப்பிரமணியன் என்ற விவசாயியின் வயலுக்கு அடியில் பதிக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி. குழாயில் கசிவு ஏற்பட்டு அதில் இருந்து ரசாயன நீர் வெளியேறியது. இதனால் அவருடைய வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயறு வகை பயிர்கள் சேதம் அடைந்தன.

இழப்பீடு வழங்க கோரிக்கை

ஓ.என்.ஜி.சி. குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக தென்கரை வேலங்குடி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விளை நிலங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். ஓ.என்.ஜி.சி.யின் குழாய்களில் அடிக்கடி கசிவு ஏற்படுவதால் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஓ.என்.ஜி.சி. உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். 

No comments:

Post a Comment