Wednesday 2 March 2016

திருவாரூர் தொகுதி : வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள் ஆய்வு


திருவாரூரில் தேர்தல் முன்னேற்பாடாக வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடிப்படை வசதிகள், இடவசதிகள் குறித்து ஆட்சியர் எம். மதிவாணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தமிழகத்தில் தேர்தல் தொடர்பான முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருவாரூரில் ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் ஆகியோர் நகரிலுள்ள வாக்குப் பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, வாக்குப் பதிவு செய்ய போதுமான இடவசதி உள்ளதா, மாற்றுத் திறனாளிகள் வாக்குப் பதிவு செய்ய நேரம் வசதி உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற திருவிக அரசு கலைக் கல்லூரியில் இந்த முறையும் வாக்கு எண்ணிக்கை நடத்தவும், தேர்தல் பணியாளர்கள், அலுவலர்கள், பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோட்டாட்சியர் முத்துமீனாட்சி உடனிருந்தார்.

No comments:

Post a Comment