நமதூர் மத்லபுல் கைராத் மழலையர் பள்ளியில் 10ம் ஆண்டு விழா 26/03/2016 அன்று சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நமதூர் முஹ்யத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் முறை ஜமாஅத் தலைவர் ஜலாலுதீன் தலைமையில் நடைபெற்றது .இதில் பள்ளி யின் தலைவர் கலிலூர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினர் .பள்ளியின் செயலாளர் முஹம்மது ஆதம் ஆண்டு அறிக்கை வாசித்தார் .சிறப்பு பேச்சாளர் விவேகானந்தன் ,உதவி தொடக்ககல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் பள்ளியின் ஆலோசகர் சேக் முஹம்மது உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார் .பின்னர் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி நன்றி கூறினர் .
No comments:
Post a Comment