சென்னை விமான நிலையத்தில் 54 வது முறையாக இன்றும் கண்ணாடி கதவு ஒன்று விழுந்து நொறுங்கியது.
சென்னை விமானநிலையம் தினமும் லட்சக்கணக்கான பயணிகளை கையாண்டு வருகிறது. தென்னிந்தியாவின் வாயிலாக கருதப்படும் இந்த விமான நிலையத்தை நவீனமயமாக்கிய பிறகு தொடர்ந்து கண்ணாடிகள் கீழே விழுந்து உடைவது வாடிக்கையாகி வருகிறது.
அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஒரு வித பயத்துடன்தான் நடமாடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்குள் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பயணிகள் செல்வது போல கூட கேலிசித்திரங்கள் அவ்வப்போது வெளியாவதும் வழக்கமாகி விட்டது. எனினும் இந்த விஷயத்தில் விமான நிலைய அதிகாரிகள் மெத்தன போக்கால் கண்ணாடிகள் விழுந்து உடைவது தொடர்கதையாகத்தான் உள்ளது.
அந்த வகையில் 54 வது முறையாக சென்னை விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி கதவு ஒன்று விழுந்து நொறுங்கியது. நல்ல வேளையாக யாரும் காயம் அடையவில்லை. கண்ணாடி விழுவதில் விரைவில் சென்னை விமான நிலையம் சதமடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

No comments:
Post a Comment