Monday, 7 September 2015

திருவாரூர் புதிய பஸ் நிலைய பணிகள் விரைவாக முடிக்கப்படும் அமைச்சர் காமராஜ் தகவல்


M IST















புதிய பஸ் நிலையம்

திருவாரூர்-தஞ்சை சாலை விளமல் கல்பாலம் அருகே புதிய பஸ் நிலைய கட்டிடம் கட்ட ரூ.6 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணியாணை கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந் தேதி வழங்கப்பட்டு, இதுவரை ரூ.4 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று உள்ளன. இந்த நிலையில் திருவாரூர் புதிய பஸ் நிலைய கட்டிட கட்டுமான பணிகளை உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பஸ் நிலையத்திற்கான கட்டிட வரைபடத்தை பார்வையி¢ட்டார். மேலும் பஸ்கள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் உரிய இடவசதி உள்ளதா? என்பதை கேட்டறிந்து, பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டார். அப்போது அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:-

விரைவாக முடிக்கப்படும்

திருவாரூர் புதிய பஸ் நிலையம் 11.76 ஏக்கர் பரப்பளவில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் 35 பஸ்களை நிறுத்துவதற்கான வசதி உள்ளன. இங்கு 60 கடைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் போலீஸ் கண்காணிப்பு அறை, தொலைபேசி அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியே காத்திருப்போர் அறை மற்றும் உணவகம், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. பஸ் நிலைய பணிகள் விரைவாக முடிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆய்வின்போது டாக்டர்.கே.கோபால் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், நகரசபை தலைவர் ரவிச்சந்திரன், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, நகராட்சி ஆணையர் தர்மலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், ஒன்றியக்குழு தலைவர் மலர்மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment