திருவாரூர் மாவட்டத்தில் 5,835 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பார்வை குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
திருவாரூரில், பள்ளிக் குழந்தைகள் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கி மேலும் அவர் பேசியது:
நிகழாண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள சுமார் 375 பள்ளிகளைச் சேர்ந்த 59,913 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்ததில், 4,095 மாணவர்களுக்கும், நகர்ப் பகுதிகளில் 34 பள்ளிகளைச் சேர்ந்த 24,546 மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்ததில் 1,740 மாணவர்களுக்கு கண் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக சுமார் 40 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 210 மதிப்பில் அவரவர் பார்வை குறைபாட்டுக்கு ஏற்ப கண்ணாடி வழங்கப்பட்டது. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளின் கண் குறைபாடு களையப்படுவதோடு மட்டுமின்றி, அவர்களின் கல்வித் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment