திருவாரூரில் ரூ. 80 லட்சம் வரை நகை மோசடி செய்த வங்கி நகை மதிப்பீட்டாளர் ஒருவரை இன்று போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூரை சேர்ந்தவர் சுரேசன் (42). இவர் திருவாரூர் யூனியன் பேங்க் ஆப் இந்தி யாவில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டில் (2014) வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய போது அடகுக்கு வரும் தங்க நகைகளுக்கு மாற்றாக கவரிங் நகைகளை தங்க நகை என மதிப்பீடு செய்து தான் பணியாற்றும் வங்கியில் அடகு வைத்துள்ளார்.
இதே போல் யூனியன் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளின் எடை 3 கிலோ எனவும், நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 80 லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக யூனியன் வங்கி அலுவலர்கள் 10.12.2014 ல் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதுத்தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசனை தேடி வந்தனர். தலை மறைவாக இருந்த சுரேசன் 24.8.15-ல் வாணூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரண டைந்த சுரேசனை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் யூனியன் வங்கி வாடிக்கையாளர்களால் கொடுக்கப்பட்ட உண்மை நகைகளில் சிலவற்றை சுரேசன் வேறு வங்கிகளில் அடகு வைத்துள்ளது தெரியவந்துள்ளது. வேறு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட 1100 கிராம் நகைகளை மீட்டனர். நகை மோசடியில் ஈடுபட்ட சுரேசனை திருவாரூர் குற்றவியல் நீதி மன்றத்தில் நீதிபதி கவிதாவிடம் முன்னிலைப்படுத்தினர். நீதிபதி கவிதா சுரேசனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment