Thursday, 10 September 2015

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் முற்றுகை போராட்டம்














திருவாரூர் அருகே அலிவலம் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். 

முற்றுகை போராட்டம்

திருவாரூர் அருகே அலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் நேற்று பள்ளி வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ் பிரகாஷ், முன்னாள் நிர்வாகி பிரதீப் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பள்ளியில் கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் திறந்த வெளியில் படிக்கின்ற நிலை உள்ளது. எனவே பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தரவேண்டும். கழிவறை வசதி மேம்படுத்திட வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த தாசில்தார் ராஜகோபால், திருவாரூர் தாலுகா இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவர்களுக்கு விரைவில் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
 

No comments:

Post a Comment