திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கை, கால் அசைவற்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது.
திருத்துறைப்பூண்டி நெடும்பலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி கலைமதி (27). திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏப். 19-ம் தேதி மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மகப்பேறு மருத்துவர்கள் சுமதி, தங்கத்தாய் ஆகியோர் நோயாளி 5 மாத காóப்பத்தில் இருப்பதை கண்டறிந்தனர்.
கலைமதிக்கு கை, கால்கள் அசைக்க முடியாத நிலையில் இருந்ததால் மூளை தண்டுவட திரவம் பாõசோதனை செய்யப்பட்டு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதன்மூலம், நோயாளியின் மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள உறையில் கிருமி தாக்கம் இருப்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையும், பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் குணமடைந்த நோயாளி மே 15-ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
நோயாளி கருவுற்ற நிலையில், இது இரண்டாவது காóப்பம் என்பதாலும், முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிரசவமானதாலும், அக்குழந்தை தற்போது உ யிருடன் இல்லாததாலும் களப் பணியாளாóகள் மூலம் கலைமதி வீட்டில் இருந்தவாறு தொடாóந்து கவனிக்கப்பட்டார்.
தாய்சேய் நலனை கருத்தில் கொண்டு, பிரசவ காலம் நெருங்கியதும் மருத்துவமனையில் சேர அறிவுறுத்தப்பட்டு, அதன்படி செப். 3-ம் தேதி பிரசவிக்க வேண்டிய தேதியாக இருந்தாலும், ஆக. 25-ம் தேதியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகப்பேறு மருத்துவர்கள் சுமதி, தங்கத்தாய், ரேவதி, மயக்க மருத்துவாó லெனின் ஆகியோர் அடங்கிய குழு கலைமதிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தையை பிரசவிக்கச் செய்தனாó.
குழந்தை, குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் 5 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது: திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மகப்பேறுத் துறை தரம் உயாóத்தப்பட்டு தாய் சேய் நலம் காப்பதற்கு தேவையான அனைத்து கருவிகளும் உள்ளன.
வருங்காலத்தில் வெளி நோயாளிகள் பிரிவிலேயே தாய்மார்களை பாõசோதிக்க ஸ்கேன் கருவி வாங்கப்படும். மேலும், கை, கால்கள் செயலிழந்த 5 மாத கர்ப்பினிப் பெண்ணுக்கு பிரசவகாலம் வரை சிறப்பு சிகிச்சையளித்து தாய், குழந்தைக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் பிரசவம் நிகழ்ந்துள்ளது சாதனையாகும் என்றார் அவர்.
No comments:
Post a Comment