பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை வார நாட்களில் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கட்டண சலுகையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.
அதாவது, 3 முறைகளில் இந்த சலுகை இருக்கும்.
அதில், குறிப்பிட்ட 2 நிறுத்தங்களுக்கு இடையே தினமும் பயணம் செய்வோருக்கு 20 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட உள்ளது.
இந்த சலுகை 12 முறை, 50 முறை, 100 முறை என 3 சலுகை கட்டண அட்டைகளாக வழங்கப்படும். 12 முறை பயணிக்கும் அட்டை 7 நாட்களுக்கும், 50 முறை பயணம் செய்வதற்கான அட்டை 30 நாட்களுக்கும், 100 முறை பயணிக்கும் அட்டை 60 நாட்களுக்கும் செல்லத்தக்க வகையில் வழங்கப்படும்.
இதற்கு திரும்பப் பெறத்தக்க ரூ.50ஐ முன்பணமாக செலுத்த வேண்டும்.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், 50 முறை பயணம் செய்ய எடுத்த அட்டையில் 40 முறை மட்டுமே பயணம் செய்திருந்தால், மீதமிருக்கும் 10 முறை பயணத்தை அடுத்த அட்டை பெறும் போது அதில் வரவு வைத்துக் கொள்ள வசதி உள்ளது.
பயண அட்டையை திருப்பிக் கொடுக்கும் போது, பயணிக்காத பயணத்துக்கான கட்டணத்தையும், முன் பணத்தையும் பயணி திரும்பப் பெறலாம்.
நாம் தினந்தோறும் பயணிக்கும் ரயிலில் எடுக்கும் சீசன் டிக்கெட் தான் கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது இங்கே என்று பயணிகள் சொல்வது கேட்கிறது.
No comments:
Post a Comment