Sunday, 6 September 2015

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்த 40ம் நாள் நிகழ்வு அனுசரிப்பு!

 முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைந்த 40ஆம் நாள் நிகழ்வு ராமேஸ்வரத்தில் கடைபிடிக்கப்பட்டது.



இதையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளிவாசலில் ‘தமாம்’ எனும் தொழுகை நடத்தப்பட்டது. இந்த தொழுகையில் கலாமின் சகோதரர் முகம்மது முத்து மீரா மரைக்காயர், பேரன்கள் ஷேக் தாவுத், ஷேக் சலீம், கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்திகேயன், திரைப்பட நடிகர்கள் ராகவா லாரன்ஸ், தாமு, சண்முகராஜன், அரசியல் கட்சி பிரமுகர்கள் ரவிச்சந்திர ராமவன்னி (த.மா.கா), கராத்தே பழனிச்சாமி (ம.தி.மு.க), சிங்கை ஜின்னா (தே.மு.தி.க), கஜேந்திரன் (அ.தி.மு.க), ராஜாமணி (காங்கிரஸ்) மற்றும் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.



சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து வந்திருந்த கிளை நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகர் கே.சி.மணிவண்ணன் கலாமின் 10 கட்டளைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களிடமும், பள்ளி குழந்தைகளிடமும் வழங்கினார்.

No comments:

Post a Comment