கோட்டூர் அருகே 10–ம் வகுப்பு வரை படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.
கிளீனிக்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள திரு வண்டுதுறை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது70). இவர் ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவருடைய மனைவி ராஜம் (64). இவர் கோட்டூரை அடுத்த ஆதிச் சபுரம் கம்பங்குடி ஆர்ச் அருகே கிளீனிக் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் செங்குட் டுவன், மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி, தாசில் தார் ரெங்கசாமி ஆகியோர் நேற்று கோட்டூர் பகுதியில் உள்ள தனியார் மருத்து வமனைகள், கிளினீக்குகளில் திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.
போலி டாக்டர் கைது
அப்போது ராஜம் நடத்தி வரும் கிளீனிக்கிலும் ஆய்வு நடந்தது. ஆய்வின்போது கிளீனிக்கில் மருத்துவம் பார்த்த ராஜத்தின் டாக்டர் படிப்புக்கான சான்றிதழை அதிகாரிகள் சரிபார்த்தபோது அது போலி சான்றிதழ் என்பதும், 10–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராஜம் தான் டாக்டருக்கு படித்ததாக கூறி பொதுமக்களுக்கு மருத் துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து கோட்டூர் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜத்தை கைது செய்தனர்.
No comments:
Post a Comment