Friday, 15 May 2015

சிறுநீர் துவாரம் பிரச்சினை: 6 மாதத்தில் 120 குழந்தைகளுக்கு சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை
















எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சித்ரா அய்யப்பன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆண் உறுப்பு சிதைவு எனும் நோய் என்னும் சிறுநீர் துவாரம் பிரச்சினை 250 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டாலோ அல்லது அதை வெளியே சொல்வதற்கு பெற்றோர்கள் தயங்கி விட்டுவிட்டாலோ குழந்தை பெரியவனாகி திருமண வாழ்க்கைக்கு போகும் போது பெரிய பிரச்சினை ஏற்படும்.

இந்த அறுவை சிகிச்சை 1 வயது 1½ வயது குழந்தைகளாய் இருக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்வது நல்லது. சிகிச்சைக்கு பிறகு 7 நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் போதும், அதன்பிறகு எந்த மருந்தோ அல்லது பின்விளைவுகளோ இருக்காது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 120 குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை செய்து இருக்கிறோம்.

இதை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.1½ லட்சம் வரை செலவு ஆகும். ஆனால் இங்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment