Wednesday, 13 May 2015

திருவாரூர் மாவட்டத்தில் ரோந்து பிரிவால் (ATP) குற்றங்கள் தடுத்து நிறுத்தம்














திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரோந்து பிரிவால் குற்றங்கள் அதிக அளவில் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் கூறினார்.

புதிய ரோந்து பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் “எந்த நேரத்திலும் போலீஸ்” என்ற பெயரில் புதிய ரோந்து பிரிவை கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தொடங்கி வைத்தார். இந்த புதிய ரோந்து பிரிவிற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனி மையம் அமைக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை பொதுமக்கள் 9442090108 என்ற எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு குற்ற செயல்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரோந்து பிரிவின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

20 மோட்டார்சைக்கிள் பிரிவினர்

திருவாரூர் மாவட்டத்தில் சாராயம் விற்பனை மற்றும் கட்ட பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக பிடிக்கவும், குற்ற செயல்கள் நடக்கும் முன் தடுக்கவும் எந்தநேரத்திலும் போலீஸ் என்ற பெயரில் புதிய ரோந்து பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்¢பட்டது. இதில் 20 மோட்டார்சைக்கிள் பிரிவினர் 24 மணி நேரமும் சூழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தனி மையம்

இவர்களுக்கு தகவல் தெரிவிக்க வசதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனி மையம் அமைக்கப்பட்டு போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை சுமார் 200 அழைப்புகள் வந்து உள்ளன. இதன் மூலம் திருட்டு, மதுபானம் விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் அதிக அளவில் தடுக்கப்பட்டிருக்கின்றன. எந்த நேரமும் போலீஸ் ரோந்து பிரிவால் பிடிக்கப்படும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு தொடரப்பட்டு, கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment