திருவாரூரில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய நல்ல மழைப் பெய்து வருகிறது. கன்னியாகுமரிக் கடல் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட வளி மண்டல மே ல் அடுக்கு சுழற்சி தற்போது லட்சத் தீவுகள், கேரள கடற்கரை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழைப் பெய் து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அனைத்து இடங்களிலும் மழைப் பெய்து வருகிறது.
இதனால் கோடை விவசாயம் பயன்பெற்று வருகிறது. இந்நிலை யில் வெள்ளிக்கிழமை காலை 10 மணயிலிருந்து இடியுடன் கூடிய மழைப் பெய்து வருகிற து. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 60 மில்லி மீட்டர் மழைப்பெய்துள்ளது. பிற பகுதி களில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு: திருவாரூர் - 23.80, பாண்டவையா று தலைப்பு - 13.60, முத்துப்பேட்டை - 11.20, நீடாமங்கலம் - 5.20, நன்னிலம் - 4.40, குடவாசல், திருத்துறைப்பூண்டி - 2.80 என்ற அளவில் மழைப் பதிவாகியுள்ளது.

No comments:
Post a Comment