‘புகையிலை இல்லாத உலகம்’ என்பது கனவல்ல நிச்சயம் சாத்தியமாகும் என்கிறார்கள் புகையிலைத் தடுப்பு போராளிகள். பொதுமக்கள் புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட, இந்திய அரசு பல நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறது. WHO நிறுவனத்தின் ஆர்டிகள் 5.3படி புகையிலை விற்பனை நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஆனால் ஐடிசி உள்ளிட்ட சில நிறுவனங்கள் அவற்றை மீறி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு புகையிலையின் தீமைகள் மற்றும் தடைச்சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிச்சயம் தேவை என்றார் புகையிலைத் தடுப்பு மையத் தலைவர் டாக்டர் இ.விதுபாலா.
‘இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மற்ற அரசின் அனைத்துத் துறைகளின் கூட்டான பங்களப்பும் தேவை. பள்ளிக் குழந்தைகளுக்கு புகையிலைத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள், பரிசுக்கள் போன்றவற்றை நிராகரிக்க வேண்டும் என்றார் NFTE யைச் சேர்ந்த அதிகாரி சிறில் அலெக்ஸாண்டர். தவிர ஜி.ஓ 242 ஆணையின் படி தமிழ்நாடு கல்வித் துறையைச் சார்ந்த எந்த மாணவனும் புகையிலைத் தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, அவர்கள் வழங்கும் உதவித் தொகையையோ, மாணவர்களுக்கு நடத்தும் போட்டிகளில் வழங்கும் பரிசு அல்லது சான்றிதழைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவர்களுக்கு ஆதாயம் தரும் நிகழ்வுகள் எதுவாக இருப்பினும் தவிர்க்கப்பட வேண்டும். என்றும் கூறினார்.
உலகின் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில், புகையிலைப் பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை புறக்கணிப்பதுடன் அவர்களுடன் வியாபார கூட்டு அல்லது வேறு எவ்வகைத் தொடர்பும் இல்லாமல் அவர்களைத் வர்த்தகத்திலிருந்து துண்டிக்க வேண்டும் என்றார். இதன் மூலம், அவர்களுக்கு லாபம் குறைவதோடு மட்டுமின்றி பலமும் குறையும். சமூக அக்கறையின்றி செயல்படும் இதுப் போன்ற நிறுவனங்களின் அலட்சியமே பல உயிர்களைக் கொல்லும் புற்றுநோய் பாதிப்புக்களுக்கு முக்கிய காரணம்.
அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் புகையிலை ஒழுப்புச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் வளரும் நாடுகளான பிலிப்பைன்ஸ், ப்ரேசில், இஸ்தோனியா போன்ற நாடுகளும் தொடர்ந்து புகையிலை அற்ற நாடுகளாக மாறிக்கொண்டிருக்க, நம் நாடும் அந்த இலக்கினை நோக்கி முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார் தொழில்நுட்ப நிபுணர் ப்ரணாய் லால்.
நம் நாட்டில் புகையிலை ஒழிப்பு சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. புகையிலைப் பொருட்கள் இல்லாத உலகம், மக்களின் ஆயுளை நீட்டிப்பதோடு, மகிழ்ச்சி நிரம்பியை வாழ்வையும் தரும் என்றார் டாக்டர் இ.மதுபாலா.
No comments:
Post a Comment