Friday 22 May 2015

13 மாணவ, மாணவிகள் மாநில அளவில் முதல் மூன்று இடம்


திருவாரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 13 மாணவர்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
2014-2015 ஆம் கல்வியாண்டு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில், தேர்வெழுதிய 18,926 மாண வ, மாணவிகளில் 15,857 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில் 74.6 சதவீதம், மாணவிகளில் 93.6 சதவீதம் என 83.78 மொத்த சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இதில் மன்னார்குடி செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர் ஜெ. ஜோஸ்வின் 499 மதிப்பெண் பெற்று மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடத்தைப் பிடித்தார்.
முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ, முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி முபிதாபர்வீன், திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. சோபியா ஆகியோர் 498 மதிப்பெண் பெற்று மாநி ல மற்றும் மாவட்ட அளவில் 2-ம் இடத்தைப் பிடித்தனர்.
திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. காயத்ரி, மன்னார்குடி செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பி. பிரித்தா, திருவாரூர் வாழச்சேரி மதர் இந்தியா மேல்நிலைப் பள்ளி (சுயநிதி) மாணவி ஆர்.கே. பர்கீஸ் தஸ்லிமா, திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ். ஸ்ரீஜனனி, மன்னார்குடி பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர். சபரிநாதன், மன்னார்குடி அசோகா சிசு விகார் மெட்ரிக் பள்ளி மாணவர் பி. ஹரிராம்பிரசாந்த், மாணவி பிரித்தி, திருவாரூர் ஆர்.சி. பாத்திமா மெட்ரிக் பள்ளி மாணவி ஜே. சீதாளபிரியா, திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே. சஸ்டிகா ஆகியோர் 497 மதிப்பெண் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.
அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்: மாவட்ட அளவில் நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எல்.ஜெ. வர்ஷா, கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ. சுவாதி ஆகியோர் 495 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தையும், உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். பவ்யா 493 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அன்னபூரணி 492 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தனர். திருவாரூர் மாவட்ட அளவில் நிகழ் கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 83.78 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டில் 84.12 தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment