Tuesday 26 May 2015

ஆதார் எண் அளிக்காவிட்டாலும் வாக்களிக்க அனுமதி: தேர்தல் அதிகாரி விளக்கம்!












 ஆதார் எண்ணை அளிக்காத எந்த வாக்களார்களின் எந்தவொரு தேர்தல் சேவையும் மறுக்கப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''முற்றிலும் பிழைகளற்ற மற்றும் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதை இலக்காகக் கொண்டு இயதிய தேர்தல் ஆணையம் பணித்தவாறு தேசிய அளவில் வாக்காளர் பட்டியல்களை செம்மைப்படுத்தி வாக்காளர் விவரங்களை உறுதிபடுத்தும் திட்டம் ((NERPAP), 03.03.2015 முதல் தமிழ்நாட்டில் வெற்றிகரமான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

வாக்காளர் பட்டியல் விவரங்களோடு ஆதார் விவரங்களை இணைப்பதும் NERPAP திட்டத்தின் நோக்கமாகும். மேலும் வாக்காளர்களிடமிருந்து அவர்களது கைபேசி/மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பெற்று அவற்றை வாக்காளர் பட்டியல் தரவுதளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் தேர்தல் தேதி, வாக்காளர் பட்டியல் திருத்தக்கால அட்டவணை, பெயர்நீக்கல்/திருத்தலுக்கான அறிவிப்பு முதலியவற்றையும், மேலும் இதர உதவிச் சேவைகளையும் அவர்களுக்கு அளிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக வாக்காளர்களிடமிருந்து தகவல்களைப் பெற வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்தனர். இதற்காகவும், படிவங்கள் 6,7,8 மற்றும் 8A ஆகியவற்றை வாக்காளர்களிடமிருந்து பெறுவதற்காகவும் நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை 13 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றை தீர்வு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. 

24-05-2015 வரை, தமிழ்நாட்டிலுள்ள 5.62 கோடி வாக்காளர்களில் 5.54 கோடி (98.72%) வாக்காளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் 4.97 கோடி (88.48%) வாக்காளர்களின் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் விவரங்களோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆயத்த நிலையில் உள்ளது. 

இந்நிலையில், ஆதார் எண்ணை அளிப்பது வாக்காளர்களின் சுய விருப்ப அடிப்படையிலானது என்று இயதிய தேர்தல் ஆணையம் வலியுறுத்திக் கூறியுள்ளது. ஆதார் எண்ணை அளிக்காத காரணத்தினால் எந்த ஒரு வாக்காளருக்கும் தேர்தல் தொடர்பான எந்த ஒரு சேவையும் மறுக்கப்படாது. ஆதார் எண்ணை அளிக்காத காரணத்தினால், புதிதாய் பெயர் சேர்த்தல்/புதிதாய் பெயர் சேர்த்தலுக்கான ஆட்சேபணை தெரிவித்தல் அல்லது வாக்காளர் பட்டியலிலிருயது ஒரு வாக்காளரின் பெயரை நீக்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படமாட்டாது. வாக்காளர் பட்டியல்/வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை/வாக்காளர் சீட்டு ஆகியவற்றிலோ, பொதுமக்கள் பார்க்கத்தக்க வகையில் வலைதளத்திலோ, பொதுமக்களுடன் பகிரத்தக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் எந்த ஒரு ஆவணத்திலோ அல்லது பொதுத்தளத்திலோ, ஒரு வாக்காளரின் ஆதார் எண் காண்பிக்கப்படமாட்டாது'' எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment