பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் தங்களது பதிவை படித்தப் பள்ளியிலேயே செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாமல் மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் படித்தப் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவை பதிவு செய்துகொள்ளலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கெனவே பதிவு செய்து, நிகழ்கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பெற பள்ளிக்கு செல்லும் போது தங்களது வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை அசல் மற்றும் நகல் மற்றும் குடும்ப அடையாள அட்டை அசல் மற்றும் நகலுடன் சென்று தத்தம் பள்ளியில் வேலைவாய்பபு அலுவலக பதிவை ஆன்-லைன் மூலமாக மேற்கொண்டு உங்களது
வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை உங்கள் பள்ளியிலேயே பெற்று கொள்ளலாம்.
பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு செல்ல தேவையில்லை, மதிப்பெண் பட்டியல் பெற செல்லும்போது மேற்கூறிய ஆவணங்களுடன்தான் பயின்ற பள்ளிக்கு சென்று கணினியில் ஆன்-லைன் மூலமாக பதிவு செய்து கொண்டு வேலைவாய்ப்பு அடையாள அட்டயைப் பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment