வருமான வரித்துறை 2014–2015–ம் நிதி ஆண்டில் வரியாக ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 200 கோடி வசூலித்து உள்ளது.
ரூ.7 லட்சம் கோடி
மத்திய அரசின் வருவாயில் வருமான வரியாக வசூலிக்கப்படும் தொகை முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 31–ந்தேதியுடன் முடிவடைந்த 2014–2015–ம் நிதி ஆண்டில் வருமான வரித்துறை வருமான வரி, கம்பெனிகள் வரி உள்ளிட்ட வரிகள் மூலம் சுமார் ரூ.6 லட்சத்து 96 ஆயிரத்து 200 கோடி வசூலித்து இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.7 லட்சத்து 5 ஆயிரம் கோடி வரி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த இலக்கை விட சுமார் ரூ.9 ஆயிரம் கோடி குறைவாக அதாவது 14 சதவீதம் குறைவாக வரிவசூல் ஆகி இருக்கிறது.
19 சதவீதம் அதிகரிப்பு
என்றாலும் அதற்கு முந்தைய நிதி ஆண்டுடன் (2013–2014) ஒப்பிடும் போது வரி வருவாய் 19 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2013–2014–ம் நிதி ஆண்டில் வசூலான வரி வருவாய் 5 லட்சத்து 83 ஆயிரம் கோடி ஆகும்.நேரடி வரி வருவாய் மூலம் 2014–2015–ம் நிதி ஆண்டில் ரூ.7 லட்சத்து 36 ஆயிரம் கோடி திரட்ட முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த போதிலும், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக பின்னர் அந்த இலக்கை ரூ.7 லட்சத்து 5 ஆயிரம் கோடியாக வருமான வரித்துறை மாற்றி அமைத்தது.
முட்டுக்கட்டை
வருமான வரித்துறையின் கொள்கைகளை வகுக்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் மிகுந்த முனைப்பு காட்டி முடிந்த அளவுக்கு கூடுதல் வரி வருவாயை ஈட்டியது. ஆனால் அதன் பிறகு சில துறைகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவு வாரியத்தின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது.மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment