Saturday, 2 May 2015

திருவாரூர் மாவட்டத்தில் மே 6-ல் ஜமாபந்தி


திருவாரூர் மாவட்டத்தில் மே 6-ம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்குகிறது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மன்னார்குடி வட்டத்தில் மே 6 முதல் 26 வரை ஆட்சியர் எம். மதிவாணன், குடவாசல் வட்டத்தில் மே 6 முதல் 21 வரை மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், திருவாரூர் வட்டத்தில் மே 6 முதல் 12 வரை கோட்டாட்சியர், நீடாமங்கலம் வட்டத்தில் மே 6 முதல் 13 வரை மன்னார்குடி கோட்டாட்சியர், நன்னிலம் வட்டத்தில் மே 6 முதல் 15 வரை மாவட்ட வழங்கல் அலுவலர், வலங்கைமான் மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் மே 6 முதல் 15 வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகியோர் வருவாய் தீர்ப்பாய அலுவலர்களாக செயல்பட்டு கணக்குகளை சரிபார்ப்பர்.

அரசு விடுமுறை நாட்கள் (சனி, ஞாயிறு) மற்றும் திங்கள்கிழமை நீங்கலாக நாள்தோறும் காலை 9 மணிக்கு வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, மக்கள் தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் நேரில் சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment