ஆடிட்டர் ஆவதே எனது லட்சியம் என திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி உமாமகேஸ்வரி கூறினார்.
தேர்வு முடிவுகள்
திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 826 மாணவர்கள், 8 ஆயிரத்து 395 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 221 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதினர். இதில் 4 ஆயிரத்து 593 மாணவர்கள், 7 ஆயிரத்து 222 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 815 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தேர்ச்சி 84 சதவீதம். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்தனர்.
முதலிடம்
திருவாரூர் மாவட்ட அளவில் மேலமரவக்காடு தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.உமாமகேஸ்வரி 1,180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார்.
மாணவி உமாமகேஸ்வரி பெற்ற மதிப்பெண்கள் பாடவாரியாக விவரம் பின்வருமாறு:-
தமிழ்-193
ஆங்கிலம் -188
பொருளாதாரம்-200
வணிகவியல்-200
கணக்குபதிவியல்-200
வணிககணிதம்- 199
மொத்தம்-1,180.
முதலிடம் பிடித்த மாணவி உமாமகேஸ்வரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எனது தந்தை பெயர் ராஜகோபால், தாய் அகிலா. ஆடிட்டராக வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம். ஆதலால் தான் நான் வணிகவியல் பாடத்தை தேர்வு செய்தேன். எனது பள்ளி தாளாளர் மதிகுணன், தலைமை ஆசிரியர் கவுரி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் அளித்த ஊக்கமே எனது வெற்றிக்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
2-வது இடம்
திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வி.லட்சுமி 1,178 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார்.
மாணவி லட்சுமி பெற்ற மதிப்பெண்கள் பாடவாரியாக விவரம் பின்வருமாறு:-
தமிழ்-190
ஆங்கிலம்-195
பொருளாதாரம்-195
வணிகவியல்-198
கணக்குபதிவியல்-200
வணிககணிதம்-200
மொத்தம் -1,178.
மாணவி லட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது தந்தை பெயர் வேல்முருகன், தாய் வசந்தி. மாநில அளவில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு படித்தேன். ஆனால் மாவட்ட அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளேன். எனது பள்ளி தாளாளர் வடுகநாதன், தலைமை ஆசிரியை ரெத்தினகுமாரி மற்றும் எனது குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தினால் தான் வெற்றி பெற்றேன். ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே எனது கனவு. அதற்கான முழு முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
3-வது இடம்
மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.அரசனகுமாரி 1,177 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடம் பிடித்தார். மாணவி அரசனகுமாரி பெற்ற மதிப்பெண்கள் விவரம் பாடவாரியாக பின்வருமாறு:-
தமிழ்-192
ஆங்கிலம்-192
பொருளாதாரம்-196
வணிகவியல்-197
கணக்குபதிவியல்-200
வணிககணிதம்-200
மொத்தம்-1,177.
மாணவி அரசனகுமாரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பள்ளி தலைமை ஆசிரியை கிரேட்மார்க்ரெட், ஆசிரியர்கள் மேரிசெல்வராணி, சவுரி, எனது பெற்றோர் ஆகியோர் அளித்த ஊக்கத்தினால் தான் இந்த வெற்றி கிடைத்தது. ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம்.

No comments:
Post a Comment