திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை "அம்மா' உணவகம் திறக்கப்பட்டது.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் ரூ. 43 லட்சத்தில் "அம்மா' உணவகம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல கூத்தாநல்லூர் பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் "அம்மா' உணவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த உணவகங்களை சென்னையிலிருந்து முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், கோட்டாட்சியர் முத்துமீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மன்னார்குடி.யில்... மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டையில் அம்மா உணவகத்தை ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கான கல்வெட்டை நகர்மன்றத் தலைவர் டி. சுதா அன்புச்செல்வன் திறந்து வைத்து, பொதுக்களுக்கு மலிவு விலை உணவை வழங்கி விற்பனையை தொடங்கிவைத்தார்.
நகர்மன்ற துணைத் தலைவர் த. வரலெட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவர் த. உதயக்குமாரி, துணைத் தலைவர் கா. தமிழச்செல்வம், கோட்டாட்சியர் எஸ். செல்வசுரபி, வட்டாட்சியர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment