திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் கருணாநிதி உருவப்படம் மாட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா உருவப்படம்
சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு பெங்களூர் தனி கோர்ட்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, அவர் முதல்–அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பொறுப்பு ஏற்றார். ஆனாலும் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது அரசு அலுவலகங்களில் மாட்டப்படிருந்த அவருடைய உருவப்படம் அகற்றப்படவில்லை. முதல்–அமைச்சராக இல்லாத ஒருவரின் உருவப்படம் அரசு அலுவலகங்களில் மாட்டப்பட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கு முன்னாள் முதல்–அமைச்சர் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டிருப்பதாக பதில் அளிக்கப்பட்டது.
கருணாநிதி உருவப்படம்
திருவாரூர் நகராட்சி அலுவலகத்திலும் ஜெயலலிதாவின் உருவப்படம் மாட்டப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க.வை சேர்ந்த நகர சபை துணைத்தலைவர் செந்தில் மற்றும் தி.மு.க. நகரசபை உறுப்பினர்கள் நேற்று நகராட்சி ஆணையர் அறையில் மாட்டப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அருகே முன்னாள் முதல்–அமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்களை மாட்டினர். நகராட்சி அலுவலகத்தில் திடீரென கருணாநிதி உருவப்படம் மாட்டப்பட்டதால் திருவாரூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment