திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக். 16-ம் தேதி மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆடவர், மகளிருக்கான தடகளம், கைப்பந்து மற்றும் நீச்சல், 100மீ., 200மீ, 400மீ, 1500 மீ ஓட்டம் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகள் வயது வரம்பின்றி நடைபெறவுள்ளது.தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்கள், கைப்பந்து போட்டியில் முதல் இரு இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள், கல்லூரி, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். விவரங்களுக்கு 04366 227158 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment