ஸ்மார்ட்போன்கள் அளவிலும் திறனிலும் பெரிதாகிக்கொண்டிருப்பதன் விளைவாக பேட்டரியின் சார்ஜ் பற்றிய கவலையும் அதிகரிக்கிறது. விளைவு செல்போன் நிறுவனங்களும் பேட்டரி செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகின்றன. பயனாளிகளும் பேட்டரி சார்ஜை மேலும் அதிகரிப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் மைக்ரோசாப்ட் ஆய்வு ஒன்று பேட்டரியில் சார்ஜ் கூடுதலாக நீடிக்கப் புதிய வழி ஒன்றை முன் வைத்துள்ளது. பத்து வகையான ஸ்மார்ட்போன் பயனாளிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு, ஸ்மார்ட்போன் திரையின் 11.14 சதவீத பரப்பு கையின் கட்டைவிரலால் பெரும்பாலும் மறைக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது. இதன் பொருள் இந்த 11 சதவீத பகுதி பார்வையில் படாத பகுதியாக இருப்பதாகக் கொள்ளலாம். இந்தப் பகுதியில் பிரகாசத்தைக் குறைப்பதன் மூலம் பேட்டரி சார்ஜ் மேலும் அதிக நேரம் நீடிக்க வழி செய்யலாம் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் 12.96 சதவீத ஆற்றலை சேமிக்க முடியும் என்கிறது ஆய்வு.
 
ஆனால் ஓ.எல்.இ.டி டிஸ்பிளே வசதியில் தான் இந்த வழி செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான ஆய்வுதான். ஆய்வு பற்றி அறிய: http://research.microsoft.com/pubs/230303/FingerShadow-submission.pdf