Sunday, 5 October 2014

8-ஆம் தேதி சந்திர கிரகணம்: கடற்கரையில் கண்டுகளிக்கலாம்


வரும் 8-ஆம் தேதி நிகழ உள்ள சந்திர கிரகணத்தை, முடியும் தருவாயில் சென்னை கடற்கரையில் இருந்து காணலாம்.
இதுகுறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி.ஐயம்பெருமான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்துவிடும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது.
அக்டோபர் 8-ஆம் தேதி நிகழ உள்ள சந்திர கிரகணம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசிய நாடுகளில் முழுமையாகத் தெரியும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.44 மணிக்குத் தொடங்கி மாலை 6.05 மணி வரை சந்திர கிரகணம் நிகழும்.
சென்னையைப் பொருத்தவரை அக்டோபர் 8-ஆம் தேதி மாலை 5.54 மணிக்கு கிரகணத்தைப் பார்க்கலாம். சென்னை கடற்ரையில் இருந்து இந்த கிரகணத்தைப் பார்வையிடலாம். 11 நிமிடங்கள் கிரகணம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment