Wednesday 5 August 2015

ஹாக்கி: பழையவலம் உயர்நிலைப் பள்ளி சிறப்பிடம்


திருவாரூரில் பள்ளிகளுக்கிடையே அண்மையில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான பெண்கள் ஹாக்கி போட்டியில் சீனியர் பிரிவில் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி அணி முதலிடம் பெற்றது.
திருவாரூர் ஒன்றியத்துக்குள்பட்ட உயாநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையே 14, 17, 19 வயது பிரிவு வீரர்களுக்கான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இதில், 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் பழையவலம் அரசு உயாநிலைப் பள்ளி அணியும், திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதிய போட்டியில், ஜிஆர்எம் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், பழையவலம் அரசு உயாநிலைப் பள்ளி அணி இரண்டாமிடமும் பெற்றன.  17 வயதுக்குள்பட்ட சீனியர் பிரிவில் பழையவலம் அரசு உயாநிலைப் பள்ளி அணிக்கும், ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணிக்கும் நடைபெற்ற போட்டியில், பழையவலம் பள்ளி அணி வெற்றி பெற்றது. 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணிக்கும், கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அணிக்கும் நடைபெற்ற போட்டியில், ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது. முதலிடம் பெற்ற அணிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

No comments:

Post a Comment