Sunday 2 August 2015

திருவாரூர் நகர்மன்றக் கூட்டம்


திருவாரூர் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் வே. ரவிச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:
டி. செந்தில் (திமுக): திருவாரூர் ரயில்வே மேம்பாலம் 3 சாலைகள் சந்திப்பு இடத்தில் உயர் மின் அழுத்த கோபுர விளக்கு அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை. உடனடியாக பணிகள் தொடங்க வேண்டும். புதை சாக்கடை கசிவை சரி செய்ய வேண்டும். 
சம்பத் (காங்.): பழைமை வாய்ந்த மன்மதன் கோயில் இடிக்கப்பட்டதால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். எனவே, நீதிமன்ற உத்தரவின்படி குறிப்பிட்ட இடத்தை விட்டு தள்ளி இடிக்கப்பட்ட மன்மதன் கோயிலை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும்.   அசோகன் (தி.மு.க): காட்டுகாரத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். டெண்டர் விட்ட பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தாஜூதீன் (தி.மு.க): திருவாரூர் நகரில் 134 இடங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை போர்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
வரதராஜன் (சுயே.): திருவாரூர் தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை விரைந்து சரி செய்ய வேண்டும்.
கூட்டத்தில் முன்னதாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் உருவபடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment