Monday 3 August 2015

மாயமான மலேசிய விமானம்: மேலும் சில பாகங்கள் கண்டெடுப்பு


கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மேலும் சில பாகங்கள் இந்தியப் பெருங்கடல் தீவில் கண்டெடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
 இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான "லா ரியூனியன்' தீவில், போயிங்-777 ரக விமான இறக்கையின் உடைந்த பாகம் ஒன்று புதன்கிழமை கரையொதுங்கியது.
 இந்த பாகம் கடந்த ஆண்டு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.ஹெச்.370 விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
 தீவில் கண்டெடுக்கப்பட்ட அந்த பாகம், பிரான்ஸில் விமான விபத்து புலன்விசாரணை ஆய்வுக் கூடத்தில் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 இதற்கு முன்னர் போயிங்-777 ரகத்தைச் சேர்ந்த எந்த விமானமும் கடலில் விழுந்ததில்லை. எனவே அந்தப் பாகம் எம்.ஹெச்.370 விமானத்தினுடையதுதான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், லா ரியூனியன் தீவின் மற்றொரு பகுதியில் போயிங்-777 ரக விமானத்தின் கதவு உள்ளிட்ட வேறு சில பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் கண்டெடுக்கப்பட்டது.
 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸýக்குச் சொந்தமான விமானம் நடுவானில் திடீரென மாயமானது. அந்த விமானத்தில் 5 இந்தியர்கள் உள்பட 239 பேர் பயணம் செய்தனர்.
 

No comments:

Post a Comment