Thursday 13 August 2015

ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி


கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 64.78-ஆக புதன்கிழமை வீழ்ச்சியடைந்தது.
 கடந்த ஐந்து நாள்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ரூபாய் மதிப்பு, புதன்கிழமை 59 பைசா சரிந்தது.
 மந்தமாகி வரும் தனது பொருளாதாரத்தை சீர்படுத்தவும், குறைந்து வரும் ஏற்றுமதியை அதிகரிக்கவும், சீன அரசு தனது நாட்டுச் செலாவணியான யுவானின் மதிப்பை அதிரடியாகக் குறைத்து வருகிறது.
 இதனால் டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 1.9 சதவீதம் வரை குறைந்தது.
 இதன் விளைவாக உலக அளவில் பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்க டாலர்களை வாங்கிக் குவித்து வருகின்றன.
 இந்தியாவிலும், வங்கிகளும், இறக்குமதியாளர்களும் அமெரிக்க டாலர்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாகவே, ரூபாயின் மதிப்பில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 பங்குச் சந்தையிலும் சரிவு: இதேபோல், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணும் (சென்செக்ஸ்) புதன்கிழமை 384 புள்ளிகள் சரிந்து, 27,512.26 புள்ளிகளில் முடிவடைந்தது.

No comments:

Post a Comment