திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் விதிமீறல்கள் குறித்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம் என்று தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரா. முத்துமீனாட்சி கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2016-க்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் பொதுக் கூட்டம் உள்ளிட்டவைகளுக்கு இணைய தளம் மூலம் அனுமதி வழங்கும் சேவை மையம் ஆகியவை இயங்கி வருகிறது.
வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் திருத்தம், வண்ண வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகளுக்கு திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சேவை மையத்தை அணுகி பொதுமக்கள் பயன்பெறலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல் தொடர்பான புகார்களை 04366-244277 என்ற தொலைபேசி எண் மூலம் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
#tnelections2016 #ac168thiruvarur #tiruvarur
No comments:
Post a Comment