Sunday, 3 April 2016

சட்டமன்ற தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க சிறப்பு மையம் கலெக்டர் பார்வையிட்டார்












சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்களை கண்காணிக்க மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், செய்தித்தாள்களில் வெளிவரும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கொடுக்கும் விளம்பரங்கள், பிரசார செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவை கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.

மேலும் டி.வி.க்களில் தேர்தல் பிரசாரம் குறித்து வெளியிடப்படும் செய்திகளும் பதிவு செய்யப்படும். இதற்காக 4 டி.வி.க்கள் அமைக்கப்பட்டு நியமன அலுவலர்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். இதேபோல உள்ளூர் டி.வி. நிறுவனத்தின் ஒளிபரப்பு செய்யப்படும் செய்திகள், விளம்பரங்களும் கண்காணிக்கப்படுகிறது என்றார். அப்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் ஊடக சான்று மையத்தின் நியமன அலுவலர்கள் உடன் இருந்தனர்.  

No comments:

Post a Comment