Thursday 7 April 2016

8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு விரைவில் இலவச மருத்துவக் காப்பீடு

பொருளாதாரத்தில் நலிவடைந்த 8 கோடி குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில், இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
 
 மத்தியமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது:
 நாடு முழுவதும், பொருளாதாரத்தில் நலிவடைந்த 8 கோடி குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில், இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக ரூ.30 ஆயிரம் மதிப்புக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும்.
 பயனாளிகளின் ஆதார் எண்கள் அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், ஏழை மக்களின் மருத்துவச் செலவில் கணிசமான அளவு குறையும். இந்தத் திட்டத்துக்கான பயனாளிகளின் பட்டியல் மாநில அரசுகளிடம் கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் நட்டா தெரிவித்தார்.

No comments:

Post a Comment