வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை கூடியவரை தவிர்க்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தினமும் பருகும் குடி தண்ணீரை விட கூடுதலாகப் பருக வேண்டும். இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து வெயிலின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். பொது மக்கள் தங்களது கால்நடைகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் உடுத்தும் ஆடைகள் மிக எடை குறைந்த இளம் வண்ணங்கள் உள்ள சட்டைகள் தளர்வாகவுள்ள ஆடைகள், காட்டன் சட்டைகள், குடைகள், ஷு மற்றும் காலணிகள் அணிந்து செல்ல வேண்டும்.
பணி நிமித்தமாக வெளியில் செல்லும்போது ஈரமான துணியை தலை, கழுத்து, முகம் மற்றும் மூட்டுகளில் படும்படியாக போட்டுக் கொள்ளவும். டீ, காபி, கார்போனேட்டம் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் வீட்டு பிராணிகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தில் விட்டுச் செல்ல வேண்டாம். குளுக்கோஸ் பவுடர், லெசி, நீராகாரம், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், தயிர் மற்றும் இதர வெயிலுக்கு ஏற்ற பானங்களை அவ்வப்போது பருகிக் கொள்ளலாம். உடல் மிகவும் சோர்வு மற்றும் இதர வெயில் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment