குறுகலான, போக்கு வரத்து நெருக்கடி மிகுந்த திருவாரூர்-தஞ்சை நெடுஞ்சாலையில் திடீரென பள்ளங்கள் தோண் டப்பட்டு உள்ளன. இதுகுறித்து எச்சரிக்கை அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி உள்ள னர்.
இதனால் இரவு நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் அரங் கேறுகின்றன.
தேசிய நெடுஞ்சாலை
நாகப்பட்டினத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்.67, திருவாரூரில் இருந்து தஞ்சாவூருக்கு செல்வதற்கு முக்கியமான வழித்தடம் ஆகும். திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்காக நாள்தோறும் ஏராளமான வாக னங்கள் இந்த வழித் தடத்தில் பயணிக்கின்றன. அதனால் எப்போதும் இச்சாலை போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும். மிகவும் குறு கலான, அதிக வளைவுகள் கொண்ட இந்த நெடுஞ்சாலையில் அடுத் தடுத்து உள்ள ரெயில்வே கேட்டுகள் போக்குவரத்துக்கு நெருக் கடிக்கு முக்கிய காரணம் ஆகும்.
திடீர் பள்ளங்கள்
ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறும் இந்த சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. தொலை பேசி இணைப்பு களுக்கான கேபிள்களை தரைக் கடியில் பதிப்பதற்காக சாலை ஓரத்தில் இந்த பள்ளங்கள் தோண்டப்பட்டு இருக்கிறது. ஆனால் பள்ளங்களை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப் படவில்லை. பள்ளம் உள்ளது என்ற முன் எச் சரிக்கை அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். திருவாரூர் அம்மையப்பன் உள் ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து காணப்படும் இப்பள்ளங் களை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்து கேபிள் பதிப்பு பணிகளை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுதொடர்பாக திருவாரூர் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் சிலர் “தினத்தந்தி” நிருபரிடம் கூறியதாவது:-
தடுப்பு வேலி
திருவாரூர்-தஞ்சை சாலை மிகவும் குறுகலான சாலை ஆகும். தற்போது தொலைபேசி இணைப்பு களுக்காக இச்சாலையில் தோண்டப் பட்ட பள்ளங்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்து கின்றன. அடுத் தடுத்த இடங்களில் காணப்படும் இப்பள்ளங்கள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் இல்லை.
திடீரென முளைத்துள்ள இப்பள்ளங் களால் சிறுசிறு விபத்துகள் நடக்கின்றன. இரவு நேரத் தில் நடந்து செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி கீழே விழுந்து காயம் அடை கிறார்கள். உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன் பாக பள்ளங்களை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.
இவ்வாறு வாகன ஓட்டிகள் கூறினர்.
No comments:
Post a Comment