Thursday 2 July 2015

திருவாரூர் நகரில் தலைக்கவசம் அணியாத 95 பேர் மீது வழக்கு













தட்டுப்பாடு நீடிப்பதாலும், விலை பன்மடங்கு உயர்ந்து இருப்பதா லும்ஹெல்மெட் அணிவதற்கான கால அவகாசம் நீட் டிக்கப்படுமா? என சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப் பினர்.

ஹெல்மெட் அணிவது கட்டாயம்

மோட்டார்சைக்கிள் விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க ஹெல்மெட் அணிய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை நேற்று (1-ந் தேதி) முதல் தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இத னால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண் டும். இவ்வாறு ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்ய போக்கு வரத்து துறை மற்றும் போலீ சாருக்கு தமிழக அரசு உத்தர விட்டது.

அரசு உத்தரவு காரணமாக திருவாரூர் பகுதி கடைகளில் சில வாரங்களாக ஹெல்மெட் விற்பனை படுஜோராக நடந்து வந்தது. ஒரே நேரத்தில் அனைவரும் ஹெல்மெட் வாங்க போட்டி போட்டதால் திருவாரூர் பகுதி கடைகளில் ஹெல்மெட் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் திடீரென விலை உயர்ந்ததால் பலரால் ஹெல் மெட் வாங்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று திருவாரூர் நகரில் போக்கு வரத்து போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், கமல்ராஜ் மற்றும் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சோதனை பணியில் ஈடுபட்டு, ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று, ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வாகன ஓட்டிகள் கேள்வி

சோதனையின்போது போலீசாரிடம் மோட் டார் சைக்கிள் ஓட்டுனர்கள், “ திரு வாரூர் முழுவதும் ஹெல்மெட் தட்டுப்பாடு நீடிப்பதாலும், விலை பன்மடங்கு உயர்ந்து இருப்பதாலும், கால அவகாசம் நீடிக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினர்.

சோதனை குறித்து போக்கு வரத்து போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறிய தாவது:-

ஹெல்மெட் அணியாமல் சென்றால் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என விழிப்புணர்வு பிரசாரங்கள் மூலம் அறிவுறுத்தி இருந்தோம். இன்று (நேற்று) ஒரு நாளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்களின் ஆவணங்கள் பறி முதல் செய்யப்பட்டன. பறி முதல் செய்யப்பட்டதற்கான சீட்டும் வாகன ஓட்டி களுக்கு உடனடியாக வழங்கப் பட்டது.

ஐ.எஸ்.ஐ. சான்றுடன் கூடிய ஹெல்மெட்டுகளை வாங்கி, அதற்கான ரசீதை காண்பித்த பின்னர் தான் ஆவணங்கள் விடுவிக்கப் படும். இவ்வாறு பலர் ஆவணங்களை திரும்ப பெற்று சென்று இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தரம் இல்லாத ஹெல்மெட்

இதனிடையே திருவாரூர் பகுதியில் தரம் இல்லாத ஹெல்மெட் விற்பனை செய் யப்படுவதாகவும், ரூ.500 விலை கொண்ட ஹெல் மெட்டை ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

குறைந்த விலையில் தரமான ஹெல்மெட் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

No comments:

Post a Comment