Friday, 3 July 2015

செல்லிடப்பேசி புதிய வசதி: இன்று முதல் அமல்


செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் தங்களது எண்களை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியிலும் விரும்பிய நிறுவனங்களின் சேவைகளுக்கு மாறிக் கொள்ளும் புதிய வசதி (எம்என்பி) வெள்ளிக்கிழமை (ஜூலை 3) முதல் அமலுக்கு வருகிறது.
 பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் புதிய வசதியை வழங்கவுள்ளன.
 தற்போது வரை, இந்த நடைமுறை குறிப்பிட்ட தொலைத்தொடர்பு வட்டம் அல்லது மாநிலங்கள் அளவிலேயே செயல்பாட்டில் இருந்து வருகிறது.
 இந்நிலையில், புதிய வசதி அமலுக்கு வருவதால், இனி கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்பவர்கள், புதிய செல்லிடப்பேசி அட்டை (சிம் கார்டு) வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
 முன்னதாக, தேசிய அளவில் செல்லிடப்பேசி எண்களை விரும்பிய நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ளும் வசதியை ஜூலை 3-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment