செல்போன் அல்லது செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சினால், உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறப்படுவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்எல்என் நிறுவனத்தின் வடகிழக்கு பகுதிக்கான தலைமை நிர்வாகி டி.பி. சிங் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், செல்போன் கதிர்வீச்சினால் உடல் நலன் குறைபாடு ஏற்படுமா என்பது குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளில் இதுவரை இறுதியான முடிவுகள் வெளியாகவில்லை.
அதே போல, செல்போன் கதிர்வீச்சுகளுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment