T
ரத்த தானம் செய்தால் மாரடைப்பு ஏற்படாது என மருத்துவ கல் லூரி முதல்வர் மீனாட் சிசுந்தரம் கூறினார்.
கருத்தரங்கு
திருவாரூர் மருத்துவ கல் லூரியின் ரத்த வங்கி மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக ரத்த தான கொடையாளர் தின விழிப் புணர்வு பேரணி நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சி திருவாரூர் ரெயில் நிலை யத்தில் நடைபெற்றது. மருத் துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ரெயில் நிலையத்தில் இருந்து புறப் பட்டு பஸ்நிலையம், கடைவீதி, தெற்குவீதி வழியாக சென்று வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து ரத்ததானம் பற்றிய கருத்தரங்கு நடை பெற்றது. கருத்தரங்கில் மருத் துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் ரத்தம் தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாரடைப்பு ஏற்படாது
தானத்தில் சிறந்தது ரத்த தானம். தொடர்ந்து ரத்த தானம் செய்து வந்தால் மாரடைப்பு ஏற்படாது. புதிய ரத்த அணுக்கள் உருவாகும். 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் ரத்ததானம் செய்யலாம். 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்வது உடலுக்கு நல்லது. திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் தினசரி 35 பேர் ரத்த தானம் செய் கிறார்கள். இந்த ஆண்டு இது வரை 3 ஆயிரத்து 207 பேர் ரத்த தானம் செய்து இருக் கிறார்கள். ரத்த தானம் செய் பவர்கள் அரசு ரத்த வங்கி மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் மையங்களில் மட்டுமே ரத்த தானம் செய்ய வேண்டும்.
ரத்த தானம் செய்யும் ஒவ்வொருவரும் மற்றொரு உயிரை காப்பாற்றுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செங்குட் டுவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுமதி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் ராமச்சந்திரன், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பியூலாலில்லி, அரசு மருத்துவ கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment